நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சூரிய மின் சக்திதகடுகள், மின்கலன்கள் உற்பத்திஆலை
கங்கைகொண்டானில் டாடா நிறுவ னம் ₹4,300 கோடியில் உருவாக் கியுள்ள சூரிய மின்சார தகடுகள் ஆலையில் வணிக ரீதியான உற் பத்தி தொடங்கியுள்ளது. 4 ஆயிரம் மெகா வாட் சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி செய்யப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. நெல்லை கங்கைகொண்டான் சிப் காட் வளாகத்தில் சூரிய மின் சக்தி தகடுகள், மின்கலன்கள் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சூரிய மின்சார தகடுகள், அதற்கான மின்கலன்கள் (பேட்டரிகள்) இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்ந்த தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சோலார் தகடுகள், மின் கலன்கள் பசுமையான மின்சார உற்பத்திக்கான எதிர் கால தேவையை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளதால் சுமார் 3ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதில் 80 சதவீதம் பேர் பெண்கள். இதன் மூலம் அதிகம் பெண்களை கொண்டு இயக்கப்படும் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை என்ற பெருமையையும் இந்த ஆலை பெற்றுள்ளது. #டாடாசோலார் #நெல்லை #கங்கைகொண்டான் #தமிழகம் #பசுமைஎரிசக்தி #வேலைவ