அக்னிவீர் திட்டம் விமானப்படை வேலை வாய்ப்பு
பணி அக்னி வேர் சம்பளம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வயது 17 முதல் 21 திருமணம் ஆகாதவர்
கல்வித் தகுதி கணித பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் உடற்பகுதி உயரம் ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் பெண்கள் 152 சென்டிமீட்டர் மார்பளவு ஆண்கள் சாதாரண நிலையில் 77 சென்டிமீட்டர் அகலமும் விரிவடைந்த நிலையில் 82 சென்டிமீட்டர் இருக்க வேண்டும்
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் உடற் திறன் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர் உடன் திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் பெண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ் பயிற்சிகளை செய்ய வேண்டும் இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்
கட்டணம் 250 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்
கடைசி நாள் 17 ஆகஸ்ட் 2023
www.agnipathvayu.cdac.in
Comments